செய்திகள்

லியோ அனைத்து பணிகளும் நிறைவு: வைரலாகும் அனிருத்-லோகேஷ் புகைப்படம்!

லியோ படத்தின் அனைத்து போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக இசையமைப்பாளர் அனிருத், லோகேஷுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். 

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் அக். 5ஆம் தேதி வெளியானது. 

டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கவனம் ஈர்க்கும் சண்டைக்காட்சிகளையும் விஜய்யின் இரு வித்தியாசமான தோற்றத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே நேரம் விஜய் பேசிய ஒரு வார்த்தையும் சர்ச்சையானது.  

படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 43 நிமிடம் இருக்குமென லோகேஷ் கூறியிருந்தார். படம் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்துக்கான முன்பதிவுகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது. 

படத்தில் 3 பாடல்கள் வெளியாகியுள்ளது. 4வது பாடல் வெளியாகுமென லோகேஷ் கனகராஜ் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். படத்தின் அனைத்து போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக இசையமைப்பாளர் அனிருத், “லாக்ட் & லோடட்” எனக் குறிப்பிட்டு லோகேஷுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். 

லியோவில் த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாகன விற்பனை நிலையங்களில் பிரதமர் மோடி படம்? காங்கிரஸ் விமர்சனம்!

புரோ கபடி லீக் 2025: தமிழ் தலைவாஸை விட்டு வெளியேறிய பவன் செஹ்ராவத்!

சத்தீஸ்கரில் 10 நக்சல்கள் சுட்டுக்கொலை! 26 பேர் கைது!

ஆசிய கோப்பை: வங்கதேசத்துக்கு எதிராக ஹாங் காங் பேட்டிங்!

கட்டுமானப் பணி: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT