செய்திகள்

சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார்: புயலைக் கிளப்பிய இமான்

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு வெளியே சொல்ல முடியாத துரோகத்தை செய்துவிட்டதாக இசையமைப்பாளர் டி.இமான் குற்றம்சாட்டியுள்ளார்.

DIN

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு வெளியே சொல்ல முடியாத துரோகத்தை செய்துவிட்டதாக இசையமைப்பாளர் டி.இமான் குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், நம்ம வீட்டுப் பிள்ளை, சீமராஜா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் டி.இமான்.

சிவகார்த்திகேயன் திரையுலகிற்கு அறிமுகமானது முதல் பல ஹிட் பாடல்களை இமான் வழங்கி அவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் இமான். அதுமட்டுமின்றி, சிவகார்த்திகேயனை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பாடகராகவும் அறிமுகம் செய்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சிவகார்த்திகேயனும், இமானும் எந்த திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்றவில்லை.

இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இமான்,

“இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மீண்டும் பயணிக்கிறது கஷ்டம். வரும் காலங்களில் அவரது படங்களில் பணியாற்ற மாட்டேன். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளார். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. வெளிப்படையாக சொன்னால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்படும்.

என் வாழ்க்கையில் நடந்த துன்பங்கள், வலிகளுக்கு சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய காரணம். அவருடன் மிகவும் நெருக்கமாக பழகியதால், அவர் செய்த துரோகத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இமானின் இந்தப் பேட்டி, தமிழ் திரையுலகில் புயலைக் கிளப்பியுள்ளது. சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் இணையத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

ரூ.12 லட்சத்தில் தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் மரணம்!

மீண்டும் வெற்றிப்படம் கொடுத்த பகவந்த் கேசரி இயக்குநர்!

SCROLL FOR NEXT