ஜிபி முத்து நடித்துள்ள ஆர்வன் படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
டிக் டாக் செயலியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜிபி முத்து. இவருக்கு சமூக ஊடகங்களில் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் -6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார்.
அதைத் தொடர்ந்து, சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்துவந்த ஜிபி முத்து, தற்போது ஆர்வன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை மணி ஆரவ் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், ஆர்வன் படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜிபி முத்து.
இதையும் படிக்க: கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா: புதிய போஸ்டர் வெளியீடு!
இந்த போஸ்டர் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் ஜிபி முத்து நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.