செய்திகள்

ஒரே மாதத்தில் சிக்ஸ் பேக்.. என்ன செய்தார் ஹிருத்திக் ரோஷன்?

பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், ஒரு மாதத்தில் சிக்ஸ் பேக் தோற்றத்திற்கு மாறி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

DIN

பாலிவுட்டில் பிரபல நடிகராக இருக்கும் ஹிருத்திக் ரோஷன், தன் உடலின் மீது மிகுந்த கவனம் கொண்டவர். எப்போதும், சிக்ஸ் பேக் உடலமைப்பிலே இருப்பதால் உடற்பயிற்சி செய்யும் விடியோக்களையும் பதிவிடுவார். 

இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ‘விகரம் வேதா’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது, ஃபைட்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வுக்காக வெளிநாடு சென்ற ஹிருத்திக் ரோஷனின் உடல் எடை கணிசமாக அதிகரித்தது. இதனைக் குறிப்பிட்டவர்,  ‘ஓய்வு முடிந்தது. விரைவில் ஜிம்மில் சந்திப்போம்’ எனப் பதிவிட்டிருந்தார். 

தொடர்ந்து, கடுமையான உடற்பயிற்சிகளை ஆரம்பித்த ஹிருத்திக் ரோஷன் ஆகஸ்ட் 31 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 7 ஆம் தேதி வரை 37 நாள்களில் மீண்டும் சிக்ஸ் பேக் தோற்றத்திற்கு திரும்பியுள்ளார். இதற்கான, படத்தை வெளியிட்டதும் குறைந்த நாளில் எப்படி உருமாற முடியும் என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். 

மேலும்,  ஹிருத்திக் தன் பதிவில், “5 வாரங்களில் இந்தப் பணியை முடித்தேன். என் கால்கள், தோள்பட்டை, முதுகுப்பகுதி மற்றும் மனத்திற்கு மிக்க நன்றி. முக்கியமான விசயங்கள், நெருக்கமானவர்கள், நண்பர்கள், பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு, சமூக நிகழ்ச்சிகள், அதிக வேலை நேரங்கள் ஆகியவற்றைத் தவிர்த்தது கடினமாக இருந்தது. அதைவிட இரவு 9 மணிக்கு தூங்கச் செல்வதும் சிரமமாக இருந்தது. ஆனால், நம்மைப் போலவே சிந்திக்கும் இணையுடன் இருப்பது சுலபமானதாக இருந்தது. என் ஆலோசகர் கிரிஸ் கெத்தினுக்கும் என் குழுவினருக்கும் நன்றி. இவர்களைப் போன்றவர்கள் என் அருகே இருப்பதால் நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாகிறதாம்: முஸ்லிம் நாடுகள் ஒருமித்த முடிவு!

மயிலாடுதுறை இளைஞர் ஆணவக்கொலை: காதலி பரப்பரப்புப் பேட்டி!

பிரதமர் மோடியின் பிறந்தநாள் ஒரு கருப்பு நாள்: காங்கிரஸ் எம்பி விமர்சனம்!

எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய சிறகடிக்க ஆசை! டிஆர்பி பட்டியல் வெளியீடு!

ஓடிடியில் மதராஸி எப்போது?

SCROLL FOR NEXT