செய்திகள்

குத்துச் சண்டைப் பயிற்சியில் லோகேஷ் கனகராஜ்!

DIN

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்து தமிழில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநராகவும் இளைய தலைமுறை இயக்குநர்களில் முக்கிய இயக்குநராகவும் அறியப்படுபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.  

முதலில் வங்கியில் வேலை செய்து வந்த லோகேஷ் பின்னர் குறும்படங்கள் இயக்கினார். தற்போது திரைப்படங்களை இயக்கி வருகிறார். விஜய்யுடன் லியோ படத்தினை இயக்கி முடித்துள்ளார். இதில் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. 

டிரைலர் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் படம் முதல் நாளில் ரூ,100 கோடி வசூலிக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன. லியோ புரமோஷன் குறித்த  யூடியூப் நேர்காணல் ஒன்றில் லோகேஷ் தனது ஆசை குறித்து கூறியுள்ளார். 

“எப்படியாவது கிக் பாக்ஸிங் ஸ்டேஜில் ஏற வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசையாக இருந்து வருகிறது. காஷ்மீரில் இதற்காக பயிற்சி எடுத்துகொண்டு இருந்தேன். தற்போது 20 நாள் பயிற்சிக்கு இடைவெளி விட்டுள்ளேன். லியோ வெளியானதும் மீண்டும் தொடங்குவேன். போட்டியில் வெற்றிப் பெற்றால் வெளியே சொல்லுவேன்” என சிரித்துக் கொண்டேக் கூறினார்.

லியோவுக்கு அடுத்து லோகேஷ், நடிகர் ரஜினியின் படத்தினை இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தும் லோகேஷ் கனகராஜுக்கு இப்படி ஒரு ஆசை இருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT