செய்திகள்

கதாநாயகியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பிரபலம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த காவ்யா அறிவுமணிக்கு சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்துள்ளது.

DIN

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த காவ்யா அறிவுமணிக்கு சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்துள்ளது.

காவ்யா அறிவுமணி முன்னதாக, பாரதி கண்ணம்மா தொடரின் முதல் பாகத்தில் அறிவு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். பின்னர், அத்தொடரில் இருந்து விலகினார்.

இதைத் தொடர்ந்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில், சித்ராவுக்கு பின், இவர் நடித்து வந்தார். அதன் பிறகு, படவாய்ப்பு காரணமாக அந்த தொடரில் இருந்தும் விலகினார்.

இந்த நிலையில், நடிகை காவ்யா அறிவுமணிக்கு சினிமாவில்  கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவியில், "வாழ்க்கையில் எதிர்பார்த்தது நடந்துள்ளது. நான் அடுத்த அத்தியாயத்தை ஆரம்பிக்கிறேன். நீங்கள் என் மீது காட்டிய அன்பிற்காக, என் கடைசி மூச்சு இருக்கும் வரை உங்களை மகிழ்விப்பேன். எனது பயணத்தில் பின்னணியில் இருந்த அனைவருக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT