கோப்புப் படம் 
செய்திகள்

விஜய்யுடன் மீண்டும் இணைந்த துப்பாக்கி பட நடிகர்!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த துப்பாக்கி படக் கூட்டணி 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கூடுகிறது. 

DIN

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) வெளியாக உள்ளது. 

இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் வேளைகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தளபதி68 எனக் குறிப்பிடப்படும் இந்தப் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன.

இப்படத்தில் ஏற்கனவே பிரசாந்த், பிரபு தேவா, மோகன் ஆகிய மூன்று பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில், தற்போது 90களில் கதாநாயகனாக நடித்த மற்றொரு பிரபல நடிகரும் இதில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தில் இணைந்துள்ள பிரபல நடிகர் கேரளாவைச் சேர்ந்த ஜெயராம் ஆவார். இவர் ஏற்கனவே வெங்கட் பிரபு மற்றும் விஜய் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். 

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படத்தில் விஜய் மற்றும் ஜெயராம் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் இரண்டாவது படமான சரோஜா திரைப்படத்தில் ஜெயராம் நடித்திருந்தார். தமிழில் கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்த அவர் சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது

இடம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: ஓம்கார குடிலைச் சோ்ந்த இருவா் மீது வழக்கு

அறக்கட்டளைச் சொற்பொழிவு

மகாராஷ்டிரம்: கட்டடம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

22,000 விநாயகா் சிலைகள் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT