கோப்புப் படம் 
செய்திகள்

லியோ வெளியீடு: திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகிவுள்ளது.

DIN


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகிவுள்ளது.

நடிகர் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின், கெளதம் வாசுதேவ் உள்ளிட்ட பல பிரபலங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பாதுகாப்பு காரணங்களால் அதிகாலை காட்சிக்கு மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. காலை 9 மணிக்குதான் முதல் காட்சி திரையிடப்படவுள்ளது.

இருப்பினும், கேரளம், கர்நாடகத்தில் அதிகாலை 4 மணிக்கும், ஆந்திரம், தெலங்கானாவில் அதிகாலை 5 மணிக்கும் படம் வெளியாகியுள்ளது. தமிழக எல்லையோரம் உள்ள சில திரையரங்குகளில் தமிழிலும் படம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் எந்த திரைப்படத்துக்கும் இல்லாத அளவிற்கு இப்படத்துக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால், மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லியோ படம் திரையிடப்படவுள்ள 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

லியோ பட வெளியீட்டை கண்காணிக்க பல்வேறு மாவட்டங்களில் அரசுத் தரப்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT