நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
சமீபத்தில், ஏ.ஆர்.முருகதாஸுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து அவர் இயக்கத்தில் நடிப்பதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளப் பதிவில், “என்னுடைய 23வது படத்திற்காக உங்களுடன் இணைவதில் எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் சொன்ன கதை கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தேன்.
இதையும் படிக்க: திரைப்படமாகிறது வாச்சாத்தி சம்பவம்
இந்தப் படம் எல்லாவிதத்திலும் எனக்கு முக்கியமான படம். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக இன்னும் என்னால் காத்திருக்க முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.