செய்திகள்

டப்பிங் நிறுவனம் தொடங்கிய விக்ரம் பட வில்லன்!

பாலிவுட், கோலிவுட் ஆகியவற்றில் 50-க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ள பிரபல வில்லன் புதிதாக டப்பிங் நிறுவனம் தொடங்கியுள்ளார். 

DIN

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த படம் கடாரம் கொண்டான். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர் இந்தி நடிகர் விகாஸ் ஸ்ரீவஸ்தவ். 

இயக்குநர் மணிரத்னத்தின் ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது விகாஸ் ஸ்ரீவஸ்தவ் டப்பிங் கம்பெனி என்ற பெயரில் புதிய டப்பின் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “கடந்த 22 ஆண்டுகளாக ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் ஆகியவற்றில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். மணிரத்னம், கமல்ஹாசன், ஆமிர்கான், விக்ரம், ஹாலிவுட் நடிகர் ஸ்டீபன் லேங் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளேன். 

கிச்சா சுதீப், உபேந்திரா நடித்த கப்ஜா படத்திற்கு இந்தியில் டப்பிங் பேசினேன். டைகர் நாகேஸ்வர் ராவ் உள்ளிட்ட பல படங்களில் டப்பிங் பணிகளை செய்துள்ளேன்.

இந்தியில் இதுவரை டப்பிங் செய்யப்பட்ட அனைத்து தென்னிந்திய படங்களிலும் இயக்குநர் எதற்கு முதலிடம் கொடுத்திருந்தாரோ அந்த சாரம் இருப்பதில்லை. எனவே அவற்றின் நிஜத்தன்மையை தக்கவைத்து முழுமையாக அவற்றை மொழிமாற்றம் செய்வதே என் நோக்கம். அதற்காகவே இந்த டப்பிங் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜாசாப் புதிய வெளியீட்டுத் தேதி!

நல்லகண்ணுக்கு மீண்டும் செயற்கை சுவாசம்! அமைச்சர் மா. சுப்பிரமணியன்

விஜயகாந்தைப் போல 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு! 22 பேர் குற்றவாளி

SCROLL FOR NEXT