செய்திகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 தொடரில் இணையும் முக்கிய பிரபலம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2-ம் பாகத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார்.

DIN

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2-ம் பாகத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டுமுதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடர் அண்ணன், தம்பிகள் 4 பேரைச் சுற்றி அமையும் கதைக்களம் கொண்டது. இதில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்தத் தொடரின் இறுதிக்கட்ட காட்சிகள் இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ளது.

அஜய் ரத்னம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2-ம் பாகத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது. அதில் வரும் அக்.30 ஆம் தேதி முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், மூத்த அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்டாலின் தொடர்ந்து நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தனம் கதாபாத்திரத்தில் நிரோஷா நடிக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் அண்ணன் - தம்பி பாசத்தை மையமாக எடுக்கப்பட்டது.

ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-ம் பாகம் தந்தை - மகன் பாசத்தை அடிப்படை கொண்ட கதையாக தெரிகிறது. 

இந்த நிலையில், இத்தொடரில் நடிகர் அஜய் ரத்னம் இணைந்துள்ளார். இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பவர். ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2-ம் பாகத்தில் எந்த கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!

ஓட்டுநர் உரிமத்துடன் செல்போன் எண்ணை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறை!

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT