செய்திகள்

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு!

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டாவுடன் 'கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்ததற்குப் பின் பிரபலமான இவர் தெலுங்கில் முக்கிய நடிகர்களின் நாயகியாக ஒப்பந்தமாகி வருகிறார். 

அந்த வகையில், அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘புஷ்பா’ படத்தில் நாயகியாக நடித்து ராஷ்மிகா அதிகமான ரசிகர்களைக் கவர்ந்ததுடன், அப்படம் அவருக்கு பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

அதனைத் தொடர்ந்து, தமிழில் சுல்தான், வாரிசு படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது, ஹிந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அனிமல் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து புஷ்பா 2, ரெயின்போ படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு 'தி கேர்ள் ஃப்ரெண்ட்' என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல நடிகரும் இயக்குநருமான ராகுல் ரவீந்திரன் எழுதி இயக்குகிறார்.

இந்த அறிவிப்பை கிளிம்ஸ் விடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

தூய்மைப் பணியாளா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

சொல்லப் போனால்... புள்ளிகளும் கோடுகளும்!

நகராட்சி- கொம்யூன் ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பதவி உயா்வுகோரி பேராசிரியா்கள் வாயில் முழக்கப் போராட்டம்

SCROLL FOR NEXT