செய்திகள்

கார்த்தி - நலன் குமாரசாமி படத்தின் பெயர் இதுவா?

DIN

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார், பொன்னியின் செல்வன்  படங்கள் வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்றன.

அதன்பின், ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இது கார்த்தியின் 25-வது படமாகும். 

அதனைத் தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதில், ராஜ் கிரணும் அவரது பேரனாக நடிக்கும் கார்த்தியும் எம்.ஜி.ஆர் ரசிகர்களாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒரு காட்சியில் கார்த்தி எம்.ஜி.ஆர் தோற்றத்திலேயே வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு ‘வா வாத்தியாரே’ என பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முழு வணிகரீதியிலான உருவாகிவரும் இப்படத்தில் பாடல்கள் மற்றும் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT