இன்று மாலை வெளியாகும் துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர்!
துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்து வரும் திரைப்படம் துருவ நட்சத்திரம். மேலும் இந்தப் படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்து இருந்தது.
இதையும் படிக்க: பெண் போட்டியாளரை தாக்கினாரா விஷ்ணு? பிக் பாஸில் பரபரப்பு
இந்த நிலையில், துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.