செய்திகள்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெளியீட்டுத் தேதி!

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். 

இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி முடித்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதன் டீசர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், இந்தப் படம் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாக உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹெல்மெட்டுக்கு பதிலாக தலையில் கடாய்! போக்குவரத்து விதிகளை மீறாத இளைஞர்!

சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

3வது டி20: இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்கு!

மனம் பேசும் மொழி... மலர்!

காதலின் சாரல் மொழி... சத்யா தேவராஜன்!

SCROLL FOR NEXT