செய்திகள்

ரஜினியுடன் அமிதாப் பச்சன்!

ரஜினி 170 படப்பிடிப்பில் நடிகர் அமிதாப் பச்சன் கலந்துகொண்டார்.

DIN

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இசை - அனிருத்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன், ஃபகத் ஃபாஸில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் இப்படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ரஜினிகாந்த், “த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் லைகாவின் ‘தலைவர் 170’ படத்தில் எனது வழிகாட்டியான ஸ்ரீ அமிதாப் பச்சனுடன் 33 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பணியாற்றுகிறேன்.  என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது!” எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகர்கள் ரஜினியும் அமிதாப் பச்சனும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும் இருவரும் இணைந்து, 'அந்தாகானூன்’ 'ஹேராஃப்தார்’, ‘ஹும்’ ஆகிய படங்களிலேயே நடித்துள்ளனர். 

அமிதாப் நடிப்பில் வெளியாகி வெற்றியைப் பெற்ற ‘டான்’ படத்தை தமிழில் ‘பில்லா’ என ரீமேக் செய்து ரஜினி நடித்திருந்தார். இது ரஜினிக்கு பெரிய வசூலைக் கொடுத்த படங்களுள் ஒன்று!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி நாளை உத்தரகண்ட் செல்கிறார்!

திருமணம் எப்போது? அதர்வா பதில்!

விவசாயிகள் கூட்டத்தில் கோபமடைந்த இபிஎஸ்!

இந்த சாதனையைச் செய்தது லோகாதானாம்!

சேலத்தில் கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் மீட்பு

SCROLL FOR NEXT