செய்திகள்

காதலரை அறிமுகப்படுத்திய அமலா பால்!

நடிகை அமலா பால் தன் காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

DIN

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலா பால். விஜய்யின் தலைவா போன்ற பெரிய படங்களில் நாயகியாக நடித்தவர். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விரைவிலேயே அவரை விவாகரத்தும் செய்தார்.

இறுதியாக, அவர் நடிப்பில் ஓடிடி வெளியீடாக வந்த ‘டீச்சர்’, 'கிறிஸ்டோபர்’ படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார். 

இதையும் படிக்க: ஓடிடியில் சந்திரமுகி - 2

இந்நிலையில், அமலா பாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நீண்டகால நண்பரான ஜகத் தேசாய், கொண்டாடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது, நடனமாடிக்கொண்டிருந்த தேசாய் திடீரென தான் வைத்திருந்த மோதிரத்தைக் காண்பித்து அமலா பாலிடம் தன் காதலை தெரிவித்திருக்கிறார்.

ஆச்சரியமடைந்த அமலாவும் அவரை ஏற்றுக்கொள்வதாகக் கூறி தன் காதலை அறிவித்திருக்கிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையர்களின் இந்த காதல் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொகுசு கார் விபத்து: தொழிலதிபர் மகன் கைது!

கருணைக் கொலையும் அதற்கான சட்டங்களும்!

பொறியியல் கல்வி! புதுமையை புகுத்தும் கணினி அறிவியல்

டிஜிட்டல் மயமாகும் சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி!

சம்மதம் இல்லாமல் கருப்பை அகற்றம்! பாடகர் உதித் நாராயணன் மீது முன்னாள் மனைவி புகார்!

SCROLL FOR NEXT