கோப்புப்படம் 
செய்திகள்

இறைவன் முதல் கூழாங்கல் வரை: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

இறைவன் முதல் கூழாங்கல் வரை, இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதைப் பார்ப்போம்.

DIN

இறைவன் முதல் கூழாங்கல் வரை, இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதைப் பார்ப்போம்.

இறைவன்

தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாராவும், ஜெயம் ரவியும் மீண்டும் சேர்ந்து நடித்த, இறைவன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று(அக்.26) வெளியாகிறது. 

சந்திரமுகி - 2 

ரஜினி நடிப்பில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த செப்.28ஆம் தேதி வெளியானது. 'சந்திரமுகி - 2' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி இன்று(அக்.26) வெளியானது.

பரம்பொருள்

கவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சரத்குமார்,  அமிதாஷ், காஷ்மீரா பர்தேசி, பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி. சிவா, வின்சென்ட் அசோகன், பவா செல்லதுரை உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பரம்பொருள் திரைப்படம், கடந்த அக்.24-ல் வெளியானது.

கூழாங்கல்

பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கூழாங்கல் திரைப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் அறிமுக நடிகர்களான செல்லப்பாண்டி மற்றும் கருத்தடையான் நடித்துள்ளனர். இந்த நிலையில், கூழாங்கல் திரைப்படம் நேரடியாக  சோனி லைவ் ஓடிடியில் நாளை (அக்.27) வெளியாகிறது.

மேலும், தெலுங்கில் ஸ்கந்தா திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும், சூராபானம், கேஸ் 30, கிருஷ்ணா காடு அண்டே ஓக ரேஞ்ச் ஆகிய படங்கள் ஆஹா ஓடிடி தளத்திலும் நாளை (அக்.27) வெளியாகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT