செய்திகள்

இந்தியன் - 3 திட்டத்தில் ஷங்கர்?

இயக்குநர் ஷங்கர் இந்தியன் திரைப்படத்தின் 3-வது பாகத்திற்கான திட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது.

லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாகவும், அடுத்தாண்டு  திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அதிகம் எடுக்கப்பட்டதால் இயக்குநர் ஷங்கர் திரைக்கதையில் மாற்றம் செய்து இந்தியன் - 3 பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் மூன்றாம் பாகத்திற்காக ரூ.30 கோடி சம்பளத்தை  பெற உள்ளதாகவும் தகவல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடை உரிமையாளரை வெளியே அனுப்பிவிட்டு ரூ. 40 ஆயிரத்தை திருடிய நபர்!

தயவுசெய்து உதவுங்கள்.. மோடிக்குக் கடிதம் எழுதிய பெங்களூர் சிறுமி! காரணம்?

அதிக பேட்டரி திறனுடைய போக்கோ எம் 7! இந்தியாவில் அறிமுகம்!

ஐசிசி தரவரிசையில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறிய திலக் வர்மா!

ராக்கி கட்டிய உறவுக்கார தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்!

SCROLL FOR NEXT