செய்திகள்

நான் எப்போதும் கசப்பை முன்வைக்கிறேனா?: வசந்த பாலன் ஆவேசம்!

இயக்குநர் வசந்த பாலன் தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றினை எழுதியுள்ளார்.  

DIN

வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில், அநீதி ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் வசந்த பாலன். கடைசியாக வந்த அநீதி திரைப்படம் பலராலும் பாராட்டப்பட்டது. 

சிறிய பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் மிகவும் கஷ்டப்படுவதாக இயக்குநர் வசந்தபாலன் தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றினை எழுதியுள்ளார். சமீபத்தில் நடிகர் விஷால்கூட சிறிய  பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் இன்னும் சில ஆண்டுகளுக்கு முன்வராதீர்கள் எனக் கூறியிருந்தது சர்சையானது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் வசந்தபாலன் கூழாங்கல் படத்துக்கு காரை பரிசாக அளிக்க முடியாது நீங்கள் நல்லா இருக்கனும் என்ற வாழ்த்து மட்டுமே உள்ள செய்தியினை பார்த்துவிட்டு தனது முகநூல் பக்கத்தில் கூறியதாவது: 

இப்போது தரமான சின்னப் படங்களுக்கு தேசிய விருதும் ஓடிடி தளங்களும் கிடைப்பதே மிகப் பெரிய வரமாக மாறி விட்டது. கூழாங்கல் திரைப்படம் சிறப்பான அனுபவம். ஆனால் வெறும் வாழ்த்துகளுடன் திரைக்கலைஞன் வாழ முடியாது. சிறிய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் இது கடுமையான தண்டனைக் காலம். மீள்கிறவர்கள் பாக்கியவான்கள்.

படம்: வசந்த பாலன் முகநூல் பக்கத்தில் எடுக்கப்பட்டது. 

இப்படி சிறிய திரைப்படங்கள் சம்பந்தமான உண்மையைச் சொன்னால் வசந்தபாலன் எப்பொழுதும் கசப்பை முன் வைப்பார் என்று ஒரு கூட்டம் திட்டத் துவங்கிவிடும். லவ்டுடே ஓடலையா, டாடா ஓடலையான்னு ஒரு கூட்டம் புள்ளி விவரத்தை முன் வைக்கும். இதுவும் கடந்து போகும்” எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT