செய்திகள்

கங்கனாவின் திரைப்படத்தைப் பார்த்து கண்கலங்கிய யோகி ஆதித்யநாத்! 

பிரபல நடிகை கங்கனா ரணாவத்தின் தேஜஸ் படத்தினைப் பார்த்து உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நெகிழ்ச்சியில் கண்கலங்கியிருக்கிறார். 

DIN

தமிழில் தாம்தூம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை கங்கனா ரணாவத் ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவரது சிறந்த நடிப்பிற்காக 2 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கை வரலாற்றினை எமர்ஜென்சி படத்தினை தானே தயாரித்து இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் நவ.24ஆம் நாள் வெளியாக உள்ளது. 

தமிழில் தலைவி என்ற இணையத் தொடருக்குப் பின் மீண்டும் களமிறங்கியுள்ளார். ரஜினி நடித்து பெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் நடிகை கங்கனாவும் நடித்துள்ளார். இந்தப் படம் மோசமான விமர்சனங்களை பெற்றன. 

கங்கனா நடித்துள்ள ‘தேஜஸ்’ படம் அக்.27ஆம் தேதி வெளியாகி படுதோல்வியென விமர்சனங்கள் வந்துகொண்டுள்ளன. இந்நிலையில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னௌவில் சிறப்புக் காட்சியாக தேஜஸ் படத்தினைப் பார்த்து நெகிழ்ச்சியில் கண் கலங்கியதாக கங்கனா தெரிவித்துள்ளார். 

இது குறித்து கங்கனா ரணாவத் கூறியதாவது: 

முதல்வர் யோகி ஆதித்யநாத் படம் பார்க்கும்போது கண்கலங்கிவிட்டார். எங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் இந்தப் படத்துடன் தொடர்புகொள்ள தேசப்பற்றுள்ளவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் உறுதியளித்துள்ளார். இது பெண்களின் முன்னேற்றத்துக்கான படமில்லை; பெண்களின் சக்தியை பற்றின படமாகும்” எனக் கூறியுள்ளார்.     
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை: நடிகர் மாதவன்

தரமான மசாலா படங்களை எடுப்பது முக்கியம்: நலன் குமாரசாமி

தெரியாத எண்ணிலிருந்து வந்த திருமண அழைப்பிதழ்! 97,000 ரூபாய் கொள்ளை! | Cyber Shield | Cyber Crime

பாஜகவை கழற்றிவிட்டு தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா? - திருமா

பிரான்ஸ் அபார வெற்றி: சாதனை படைத்த எம்பாப்பேவுக்கு காயம்!

SCROLL FOR NEXT