முகப்பு
செய்திகள்

சந்திரமுகி 2 டிரைலர் எப்போது? படக்குழு அறிவிப்பு

சந்திரமுகி 2 படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Updated On : 1 செப்டம்பர், 2023 at 9:51 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:26 AM

சந்திரமுகி 2 படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

ரஜினி நடிப்பில் வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் 2ஆம் பாகம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது. மேலும், படத்தில் கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லைகா புரடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தை சந்திரமுகி முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே இயக்கி வருகிறார். படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை - தோட்டா தரணி.  

Advertisement

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படம் வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று திரைக்கு வருகிறது. இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, செப்டம்பர் 3ம் தேதி சென்னையில் நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.