செய்திகள்

நெல்சனுக்கு பரிசுத்தொகை!

ஜெயிலர் மிகப்பெரிய வசூல் வெற்றியைப் பெற்றதால் இயக்குநர் நெல்சனுக்கு பரிசுத்தொகையை வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.

DIN

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.

இந்த படம், முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

தொடர்ந்து, இரண்டாவது வார இறுதியில் ஜெயிலர் 14-வது நாளில் ரூ. 525 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இதன்மூலம், 2.0 படத்துக்கு பிறகு ரூ. 500 கோடி வசூலைக் கடந்த ரஜினியின் படமாக ஜெயிலர் சாதனை படைத்தது. 

மேலும், தமிழகத்தைத் தவிர நாட்டின் பிற மாநிலங்களில் இப்படம் ரூ.200 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் ரூ.76.85 கோடியும் கர்நாடகத்தில் ரூ.62.9 கோடியையும் கேரளத்தில் ரூ.49.25 கோடி மற்றும் பிற மாநிலங்களில் ரூ.14.6 கோடியையும் வசூலித்துள்ளதாக தகவல். தமிழகத்தில் ஜெயிலர் ரூ.175 கோடியை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பின், லாபத்திலிருந்து தான் விருப்பப்பட்ட தொகையை அவருக்கு செக் மூலம் தந்ததுடன் ரூ.1.64 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ ரக சொகுசு கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார்!

இரண்டு பிஎம்டபிள்யூ  ரக கார்களை ரஜினியின் இல்லத்திற்குக் கொண்டு வந்த கலாநிதி மாறன் ரஜினிக்கு பிடித்த ‘பிஎம்டபிள்யூ எக்ஸ்7’ காரை பரிசாக வழங்கினார்.

தற்போது, கலாநிதி மாறன் இயக்குநர் நெல்சனுக்கும் பரிசுத்தொகையைக் கொடுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT