செய்திகள்

அஜயன் பாலா இயக்கும் படத்தின் பெயர் மைலாஞ்சி!

அஜயன் பாலா இயக்கும் புதிய படத்திற்கு மைலாஞ்சி என தலைப்பிடப்பட்டுள்ளது. 

DIN

அஜயன் பாலா இயக்கும் புதிய படத்திற்கு மைலாஞ்சி என தலைப்பிடப்பட்டுள்ளது. 

திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என பன்முகத் திறமை கொண்ட அஜயன் பாலா புதிய படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தின் பூஜை அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

இதில் ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக 'கோலிசோடா 2' புகழ் கிரிஷா குருப் நடிக்கிறார். 

மேலும் யோகி பாபு, முனீஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். மலைப் பிரதேசத்தை பின்னணியாக வைத்து காதல் கதையினை படமாக எடுக்கவுள்ளனர். 

தற்போது இந்த படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. இதன்படி படத்துக்கு மைலாஞ்சி என தலைப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT