செய்திகள்

விஜய் டிவியில் புதிய தொடரின் முக்கிய தகவல்!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ள புதிய தொடரின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

DIN

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ள புதிய தொடரின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள், ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த தொலைக்காட்சி தொடர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், டிஆர்பியில் பின் தங்கிய தொடர்களை முடிப்பது வழக்கம். அதன்படி, காற்றுக்கென்ன வேலி, கன்னே கலைமானே தொடரை தொடர்ந்து டிஆர்பியில் கலக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் புதிய தொடரின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் சங்கரேஷ் குமார் மற்றும் சாய் காயத்ரி நடிக்கவுள்ளனர்.

இந்த தொடருக்கு, 'நீ நான் காதல்' என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்டார் மா தொலைக்காட்சியில் வெற்றி தொடரான 'நுவ்வு நேனு பிரேமா' என்ற தொடரின் மறு உருவாக்கமாக 'நீ நான் காதல்' தொடர் உள்ளது. இந்த தொடரை தாய் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

சங்கரேஷ் குமார் முன்னதாக ரோஜா மற்றும் கோகுலத்தில் சீதை தொடரில் நடித்தவர். ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல தொடர்களில் சாய் காயத்ரி நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT