முகப்பு
செய்திகள்

படப்பிடிப்பில் டோவினோ தாமஸுக்குக் காயம்!

படப்பிடிப்பின்போது நடிகர் டோவினோ தாமஸுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:11 PM
பகிர்:

தமிழில் மாரி - 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் டோவினோ தாமஸ். மலையாளத்தில் 2012 முதலே நடிக்க ஆரம்பித்தவர் என்னு நிண்டே மொய்தீன், மாயநதி, தீவண்டி, எண்ட உம்மாண்டே பேரு, மின்னல் முரளி, தள்ளுமாலா என பல நல்ல படங்களில் நடித்துள்ளார். 

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 2018 திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 

இந்நிலையில், டோவினோ நடிப்பில் உருவாகிவரும் ‘நடிகர் திலகம்’ படப்பிடிப்பின்போது அவருக்கு எதிர்பாராத விதமாக காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு டோவினோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

பரிசோதனை செய்த மருத்துவர்கள், டோவினோவுக்கு சில நாள்கள் ஓய்வெடுக்க அறிவுரை கூறியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →