செய்திகள்

கங்கனா.. நான் உங்கள் ரசிகை: ஜோதிகா

நடிகை ஜோதிகா, தான் கங்கனா ரணாவத்தின் ரசிகை எனக் கூறியுள்ளார்.

DIN

கடந்த 2005-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வெற்றி பெற்றதோடு மிக அதிகமான வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.  

லைகா புரடக்ஷன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி - 2 படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை - தோட்டா தரணி.  மேலும், கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தியை(செப்.15) முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. 

இதில் ஜோதிகா நடித்த சந்திரமுகி கதாபாத்திரமாக தேசிய விருது வென்ற நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புள்ளது.

இந்நிலையில், நடிகை ஜோதிகா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் கங்கனா ரணாவத். அவர் ‘சந்திரமுகி’ கதாபாத்திரத்தில் நடிப்பதைப் பார்த்து மிகவும் பெருமையடைகிறேன். இக்கதாபாத்திரத்தில் நீங்கள் வசீகரமாக இருக்கிறீர்கள். நான் உங்கள் ரசிகை. உங்களின் நடிப்பை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். லாரன்ஸ் மாஸ்டருக்கும், இயக்குநர் பி.வாசுவுக்கும் பெரிய வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT