முகப்பு
செய்திகள்

வெளியானது மார்க் ஆண்டனி படத்தின் 4ஆவது பாடல்

மார்க் ஆண்டனி' படத்தின் 4ஆவது பாடலான 'கருப்பண சாமி' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:13 PM
பகிர்:

மார்க் ஆண்டனி' படத்தின் 4ஆவது பாடலான 'கருப்பண சாமி' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் டிரைலர் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 3) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. 

படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு (செப்.15) வெளியாக உள்ளது.  இந்த நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் 4ஆவது பாடலான 'கருப்பண சாமி' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.