செய்திகள்

நாளை வெளியாகும் ஜிகர்தண்டா- 2 படத்தின் முக்கிய அறிவிப்பு!

DIN

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்தைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் விடியோ வெளியிட்டு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதை தெரிவித்தார்.

வேகமாக நடைபெற்று வந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸின் படப்பிடிப்பு, சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு விடியோ வெளியிட்டுத் தெரிவித்தது. மேலும், இப்படம் தீபாவளிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் முக்கிய அறிவிப்பை நாளை பிற்பகல் 12.12 மணிக்கு வெளியிடப்படபோவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க்

அதிமுக போட்டியிடாததற்கு காரணம் இதுதான்: ப. சிதம்பரம்

இருசக்கர வாகனம் திருடிய 2 போ் கைது

மன்னாா்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்

பேருந்து நிறுத்தங்களில் தங்கும் ஆதரவற்றோருக்கு மறுவாழ்வு அளிக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT