செய்திகள்

ரஜினி 171 படம் குறித்து லோகேஷ் ட்வீட்

ரஜினியுடன் கைகோர்ப்பதில் மகிழ்ச்சி என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

DIN

ரஜினியுடன் கைகோர்ப்பதில் மகிழ்ச்சி என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் ரஜினிகாந்த்துடன் சன் பிக்சர்ஸ் இணைகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் இன்று தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

இயக்குநர் லோகேஷ் தற்போது விஜய்யின் லியோ படத்தில் பிஸியாக இருக்கிறார்.

இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்குவருகிறது. இதன் பின்னரே லோகேஷ் கனகராஜ் ரஜினியின் படத்தில் கவனம் செலுத்த உள்ளார். இந்த நிலையில் ரஜினியின் 171 படத்தில் இணைவது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் மகிழ்ச்சிசை வெளிப்படுத்தியுள்ளார். 

அதில் தலைவர் ரஜினியுடன் கைகோர்ப்பதில் மகிழ்ச்சி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய், கமலைத் தொடர்ந்து உச்ச நட்சத்திரமான ரஜினி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளத்தில் இறங்கிய அரசுப் பேருந்து: 21 போ் காயம்

நெல்லையில் நில அபகரிப்பு வழக்கில் பெண்கள் உள்பட 5 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

சேதுபாவாசத்திரம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: மேயரிடம் மக்கள் மனு

SCROLL FOR NEXT