செய்திகள்

நடிகர் மம்மூட்டியின் வீட்டில் மற்றொரு துயரம்

மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் மம்மூட்டியின் சகோதரி அமீனா காலமானார். அவருக்கு வயது 70.

DIN


மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் மம்மூட்டியின் சகோதரி அமீனா காலமானார். அவருக்கு வயது 70.

கடந்த ஏப்ரல் மாதம் மம்மூட்டியின் தாய் காலமான நிலையில், இன்று அவரது இளைய சகோதரி காலமாகியுள்ளது, ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

உடல்நலப் பிரச்னைகளுக்காக சில காலம் அமீனா சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் நஸீமா என்றும் அறியப்படுகிறார். இவரது இறுதிச் சடங்குகள் செப். 13ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீனாவின் கணவர் பி.எம். சலீம், ஏற்கனவே காலமாகிவிட்டார். இவர்களுக்கு ஜிபின் சலீம், ஜூலி, ஜூபி என்ற பிள்ளைகள் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகிவிட்டது. இவர் மம்மூட்டியின் இளைய சகோதரியாவார்.

மம்மூட்டி குடும்பத்துக்கு 2023ஆம் ஆண்டு ஒரு துயரமான ஆண்டாக அமைந்துவிட்டது. அவரது தாய் ஃபாத்திமா இஸ்மாயில் கடந்த ஏப்ரல் மாதம் தனது 93வது வயதில் காலமானார். உடல்நலக் குறைவுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

செப்டம்பர் 7ஆம் தேதிதான், நடிகர் மம்மூட்டி தனது 72வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது ரசிகர்களும், பல்வேறு நாடுகளிலிருக்கும் அவரது நலம்விரும்பிகளும் சமூக வலைத்தளத்தில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். இதற்கு, தனது எக்ஸ் பக்கத்தில் மம்மூட்டியும் தனது நன்றியை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று மம்மூட்டியின் இளைய சகோதரி காலமானார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. இதற்கு ஏராளமானோர் தங்களது இரங்கலைப் பதிவு செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT