செய்திகள்

ஜிகர்தண்டா 2 டீசர்: ஒரே நாளில் 2.5 கோடி பார்வைகள்!

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டீசர் வெளியாகி 24 மணிநேரத்தில் 2.5 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

DIN

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டீசர் வெளியாகி 24 மணிநேரத்தில் 2.5 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி முடித்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஜிகர்தண்டா டபுள் எக்ஸின் டீசரை நேற்று பகல் 12.12 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்த நிலையில், டீசர் வெளியாகி 24 மணிநேரத்தில் 2.5 கோடி பார்வைகளை கடந்துள்ளது. அதேபோல், தொடர்ந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT