ரோஜா தொரின் மூலம் புகழ் பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி நடிக்கவுள்ள புதிய தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.
நள தமயந்தி எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய தொடரின் முன்னோட்ட விடியோவில் (புரோமோ) உணவகம் நடத்துபவராக பிரியங்கா நடிக்கிறார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. இவர் தெலுங்கு, தமிழில் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும், ரோஜா தொடரில் நடித்ததால், இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.
ரோஜா தொடர் ஒளிபரப்பான காலகட்டத்தில் தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வந்தது.
அதனைத் தொடர்ந்து,ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் நாயகியாக நடித்து வந்தார். சீதா ராமன் தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவந்த சமயத்தில், திடீரென தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
காதலரைத் திருமணம் செய்துகொண்டு வெளிநாடு சென்றதால், தொடரில் நடிக்கமாட்டார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது புதிய தொடரில் பிரியங்கா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அது தொடர்பான படங்கள் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது நள தமயந்தி தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.
இந்த விடியோவில், ஏழைப்பெண்ணாக வரும் பிரியங்கா, அம்மா நடத்திவந்த உணவகத்தில் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவளித்து வருகிறார். மறைந்த அம்மாவின் ஆசைக்காக அவ்வாறு செய்து வருகிறார்.
திருமணத்துக்குப் பிறகும் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவளிக்க அனுமதிக்கும் கணவனை எதிர்பார்த்து அவர் காத்திருக்கிறார். அப்போது நாயகன் அறிமுகம் நடக்கிறது. இந்த விடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.