முகப்பு
செய்திகள்

அசோக் செல்வன் திருமணம்... முதல் பாடலை வெளியிட்ட படக்குழு!

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புளூ ஸ்டார்’ திரைப்படத்தின் முதல் பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:58 AM
பகிர்:

இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புளூ ஸ்டார்.

இதனை நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்தி தயாரான இப்படத்தின் அறிமுக விடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இன்று நடிகர் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியனின் திருமணத்தை முன்னிட்டு படத்தின் முதல் பாடலான, ‘ரயிலின் ஒலிகள்’ பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. சுவாரஸ்யமாக, இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி பாண்டியனே நடித்து உள்ளார். 

உமா தேவியின் வரிகளில் கோவிந்த் வசந்தா இசையில் உருவான இப்பாடல் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →