செய்திகள்

திருப்பதி கோயிலில் நடிகர் விஷால்!

விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றியடைய வேண்டி, அவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார்.

DIN

விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றியடைய வேண்டி, அவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார்.

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடன் நல்ல வரவேற்பை பெற்று 2.6 கோடி பார்வைகளை கடந்தது. மார்க் ஆண்டனி திரைப்படம் நாளை (செப்.15) வெளியாக உள்ளது. 

இந்த நிலையில், நடிகர் விஷால் மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றியடைய வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். பின்பு ரசிகர்க்ளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

திருப்பதியில் கோயிலில்  விஷால் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈவெரா சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

சிறுமியை பாலியல் வன்கொடும செய்த உறவினருக்கு 35 ஆண்டுகள் சிறை

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு பாமகவினா் அஞ்சலி

திருவிடைமருதூரில் 81.2 மி.மீ. மழை

பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை பரிசோதித்த புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT