செய்திகள்

தமிழ் சினிமாவின் உன்னத ரசிகர் சித்தார்த்: கமல்ஹாசன்

சித்தா திரைப்படத்திற்கான தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

DIN

நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் ‘டக்கர்’ வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது, பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், ‘சித்தா’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார்.

சித்தப்பா உறவினை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. வழக்கமான மெலோ டிராமாவாக இல்லாமல் த்ரில்லர் படமாக இருக்குமென இயக்குநர் கூறியுள்ளார். 

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இப்படத்தின் முதல் திரையிடலைப் பார்த்ததும் தன் வாழ்த்துக்களை விடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.

அதில், “நல்ல படங்களைப் பார்க்க, எடுக்க ஆசைப்படும் தமிழ் சினிமாவின் உன்னத ரசிகர் தம்பி சித்தார்த். சித்தா திரைப்படம் சித்தப்பா உறவினை மையமாக் கொண்டு உருவாகியுள்ளது. என் அண்ணன் சாருஹாசன் மகள் நந்தினி மூலமாக நான் 4 வயதிலேயே சித்தப்பா ஆகிவிட்டேன். நானும் அவரும் சேர்ந்தே பள்ளிக்கு செல்வோம். சித்தப்பாவாக என் அனுபவம் இது. சித்தா - சித்தப்பாவின்  அனுபவத்தைப் படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். இந்தப் படம் சிறந்த வெற்றியைப் பெற என் வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார்.

‘சித்தா’ வருகிற செப்.28 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT