செய்திகள்

தி ரோட்: சித் ஸ்ரீராம் குரலில் வெளியான பாடல் வைரல்!

நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘தி ரோட்’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘தி ரோட்’ படத்தின் முதல் பாடல் சித் ஸ்ரீராம் குரலில் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு நடிகை த்ரிஷா லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். 

அவர் நடிப்பில் நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருக்கும் ‘தி ரோட்’ படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் த்ரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டனர்.

பான் இந்திய திரைப்படமாக அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் நெடுஞ்சாலையில் நிகழும் கிரைம் திரில்லர் கதையாக ‘தி ரோட்’ உருவாகியுள்ளது. இப்படம் வரும் அக்.6 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தில் சபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சாம் சி.ஸ். இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில், ‘தி ரோட்’ படத்தில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள முதல் பாடலான ஓ விதி பாடல் இன்று வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார் கார்த்திக் நேதா.

இப்பாடல் வெளியான இரண்டு மணி நேரத்திலேயே 5.6 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயுதப்படை ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

சஸ்பென்ஸ் உள்ளே... சைத்ரா ஆச்சார்!

பூவே உனக்காக... சித்ராங்தா சிங்!

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

மாய கண்கள்... பிரியங்கா ஆச்சார்!

SCROLL FOR NEXT