கூறியது நடந்துவிட்டது... உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா!
நடிகர் எஸ்.ஜே.சூர்யா மார்க் ஆண்டனி படத்திற்காக தனக்குக் கிடைத்த வரவேற்பைப் பற்றி உற்சாகமாக பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க: டைம் மெஷின்.. சில்க்.. விஷாலைக் காப்பாற்றியதா மார்க் ஆண்டனி - திரை விமர்சனம்
Advertisement
இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா 2022 ஆம் ஆண்டு ஜன.1 ஆம் தேதி தன் எக்ஸ்(டிவிட்டர்) தளத்தில் ‘எல்லா நல்ல கதையையும் எனக்கே அனுப்புகிறாயே இறைவா... ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதையைக் கேட்டேன். கண்டிப்பாக இது வெற்றிபெறும். அந்த அளவிற்கான திரைக்கதை உள்ள படம். மாநாடு - 2 மாதிரி இருக்கும்’ எனக் கூறியிருந்த பதிவை சுட்டிக்காட்டி, ‘ மார்க் ஆண்டனிக்கு கிடைத்த வரவேற்புக்கு மிக்க நன்றி. படம் உங்களுக்கு பிடித்திருப்பதால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. எல்லாருக்கும் என் அன்பு’ என தன் உற்சாகத்தைப் பகிர்ந்துள்ளார்.