செய்திகள்

விஜய் 68: வெங்கட் பிரபு கூறிய தகவல் வைரல்!

விஜய் 68 படம் குறித்த ரசிகரின் கேள்விக்கு இயக்குநர் வெங்கட் பிரபு பதில் அளித்துள்ளார்.

DIN

விஜய் 68 படம் குறித்த ரசிகரின் கேள்விக்கு இயக்குநர் வெங்கட் பிரபு பதில் அளித்துள்ளார்.

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘விஜய் 68’ உருவாக உள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்தப் படத்தில் அப்பா-மகன் கதாபாத்திரத்தில்  நடிகர் விஜய் நடிக்கவுள்ளதாகவும் அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும்  மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 

மேலும், இப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக  ‘டாடா’ படத்தின் மூலம் பிரபலமடைந்த அபர்ணா தாஸ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், விஜய் 68 படம் குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு கேள்விக்கு, விரைவில் என்று தனது எக்ஸ் தளத்தில்  இயக்குநர் வெங்கட் பிரபு பதில் அளித்துள்ளார். இந்தப் பதிவு சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நினைவுகள்... சுதா

கலைமாமணி விருது பெற்ற திரைக் கலைஞர்கள்! | Tamil Cinema | TNGovt | Award

ஆஸ்திரேலியாவில் சிறியரக விமானம் விபத்து: 3 பேர் பலி

என்ன சுகம் பாடல்!

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT