எதிர்நீச்சல் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் நடிகை மதுமிதா விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடியுள்ளார்.
இந்த ஆண்டு என் குட்டி விநாயகர் இவர்தான் என, குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்துக்கு ரசிகர்கள் பலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரில் ஜனனி பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை மதுமிதா. தெலுங்கு மொழித் தொடர்களில் நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமடைந்தார். எனினும் தமிழில் எதிர்நீச்சல் தொடரில் தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். சமீபத்தில் சுயமாக சம்பாதித்து கார் வாங்கியிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
நடிகை மதுமிதா தனது சமூகவலைதள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களைப் பதிவேற்றி ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து வருவார்.
குறிப்பாக நிகழ்ச்சி அல்லது விழா நாள்களில் அவர் பதிவேற்றும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே சமூகவலைதளத்தில் உள்ளது. பல லைக்குகளும், கமெண்டுகள் எனும் கருத்துகளும் அதிக அளவில் அவர் பதிவேற்றும் படங்களுக்கு கிடைக்கும்.
அந்தவகையில், விநாயகர் சதுர்த்தி நாளான இன்று (செப்.18) அவர் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய படங்களைப் பதிவேற்றியுள்ளார். அதில் கைக்குழந்தையுடன் இருக்கும் மதுமிதா, இந்த ஆண்டு என் குட்டி விநாயகர் இவர்தான் எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த படத்துக்கு ரசிகர்கள் பலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.