முகப்பு
செய்திகள்

மார்க் ஆண்டனி வசூல் இத்தனை கோடிகளா?

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 19 செப்டம்பர், 2023 at 11:59 AM
பகிர்:

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வினோத்குமார் தயாரித்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பினை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

படத்தின் ஆரம்பத்தில் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்திருந்தார்கள். படத்தில் அஜித் பற்றியும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால் படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.   

இந்நிலையில், இப்படம் வெளியான 4 நாள்களில் உலகளவில் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

மார்க் ஆண்டனி ரூ.65 கோடி பட்ஜெட்டில் உருவானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.