செய்திகள்

மைக்கேல் படத் தோல்விக்கு காரணம் இதுதான்: சந்தீப் கிஷன்

DIN

‘மாநகரம்’ படத்தில் நடித்து புகழ்பெற்ற சந்தீப் கிஷன் நடித்ததாலும்  புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி படம் என்பதாலும் ‘மைக்கேல்’ மீது பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது. 

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் வரலட்சுமி சரத்குமார், அனுசுயா, திவ்யன்ஷா கௌசிக் உள்ளிட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஸ்ரீனிவாஸ் தயாரிக்க, சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். 

பெரிதும் எதிர்பார்த்த இந்தப்படம் வசூலில் சோபிக்கவில்லை. மேக்கிங் நன்றாக இருந்தும் கதை மோசமாக இருந்ததாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் சந்தீப் கிஷன், “உண்மையான உழைப்பினை கொடுத்தோம். இருந்தும் சரியாக அமையவில்லை. இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும். ஆனாலும் அந்த படப்பிடிப்பு அனுபவங்கள் நன்றாக அமைந்தது” எனக் கூறினார். 

மேலும் ரசிகர் ஒருவர், “மைக்கேல் படம் மூலம் தாங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?” எனக் கேட்டதற்கு, “எடிட்டிங் ஒரு படத்தினை உருவாக்கும் அல்லது உடைக்கும் என்பதனை மைக்கேல் படத்தின் மூலம் உணர்ந்தேன்” எனக் கூறினார் சந்தீப் கிஷன். 

இதன் மூலம் மைக்கேல் பட தோவிக்கு எடிட்டர் சத்யநாராயணனின் எடிட்டிங்தான் காரணம் என மறைமுகமாக கூறியுள்ளார்.   

மாநகரம் பட வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனனின் மைக்கேல் படம் சரியாக அமையவில்லை. இந்நிலையில் மாயவன் 2 படம் மீண்டும் அவருக்கு புகழை தருமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தைத் திருமணங்கள் தொடா்பான புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

பொதுத் தோ்வு: மாநிலத் தரவரிசையில் பின்தங்கும் நாமக்கல் மாவட்டம்

தேசிய ஹாக்கிப் போட்டி: சென்னை மருத்துவக் கல்லூரி சாம்பியன்

பொறியாளா் வீட்டில் 35 பவுன் நகைகள் திருட்டு

சக்கரத்தில் புகை: கேரள விரைவு ரயில் 20 நிமிஷம் தாமதம்

SCROLL FOR NEXT