ஆஸ்கருக்கு தேர்வானது டோவினோ தாமஸின் 2018!
ஆஸ்கர் விருது பரிந்துரைக்கு இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ளது 2018 திரைப்படம்.
கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து உருவான திரைப்படம் 2018. இதில், டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிக் அபு, வினீத் ஸ்ரீனிவாசன், நரேன், லால் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தது.
இடுக்கி அணை திறக்கப்பட்டபோது ஏற்பட்ட வெள்ளச்சேதத்தில் இளைஞர்கள், மீனவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்பதை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்.
இதையும் படிக்க: அருங்காட்சியத்திலிருந்து பிரபாஸ் சிலையை அகற்ற முடிவு!
Advertisement
Advertisement
கேரளத்தில் மே 5 ஆம் தேதி வெளியான இப்படம் உலகளவில் ரூ.180 கோடியை வசூலித்ததாகவும் கேரளத்தில் மட்டும் ரூ.89 கோடி வசூலைக் குவித்தாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இப்படத்தை அதிகாரப்பூர்வமாக இந்தியா சார்பில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப தேர்வு செய்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.