முகப்பு
செய்திகள்

நடிகர் விஷாலின் புகாரில் உரிய நடவடிக்கை: மத்திய அரசு

திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நடிகர் விஷால் கூறிய புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக்ம் தெரிவித்துள்ளது.  

Updated On : 29 செப்டம்பர், 2023 at 4:26 PM
நடிகர் விஷால் (கோப்புப்படம்)
பகிர்:

திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நடிகர் விஷால் கூறிய புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக்ம் தெரிவித்துள்ளது. 
விஷால் நடிப்பில் செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பினை பலரும் பாராட்டி வருகிறார்கள். ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம் நேற்று ஹிந்தி மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.  
இதனிடையே, மகாராஷ்டிராவில் இப்படத்தின் டப்பிங் மற்றும் திரையிடலுக்காக அதிகாரிகள் தன்னிடம் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் படம் வெளியாக வேண்டும் என்பதால் இரண்டு பரிவர்த்தனைகளாகக் கேட்ட தொகையைக் கொடுத்ததாகவும் விஷால் தெரிவித்துள்ளார். 

நடிகர் விஷாலின் இந்த குற்றச்சாட்டு சினிமா துறையினரிடம் மட்டுமன்றி பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நடிகர் விஷால் கூறிய புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக்ம் தெரிவித்துள்ளது. 
தணிக்கை துறை அதிகாரிகள் லஞ்ச புகாருக்கு உள்ளானது துரதிர்ஷ்டவசமானது. இன்றே மும்பையில் உள்ள அதிகாரிகளை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.