முகப்பு
செய்திகள்

அக்கா மகனை நாயகனாக அறிமுகப்படுத்தும் தனுஷ்?

தனது 50-வது படத்துக்குப் பின் மீண்டும் ஒரு புதிய படத்தை தனுஷ் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:23 PM
பகிர்:

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ்  நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் டிச.15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி வருகிறார். 

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், முக்கியக் கதாபாத்திரத்தில் சந்திப் கிஷன், செல்வராகவன் ஆகியோர் நடிக்கின்றனர்.

தனுஷ், வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்க்ஸ்டராக நடிக்கிறார். இதற்காக, சென்னையின் பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்திற்குப் பின் தனுஷ் தன் அக்கா மகனை நாயகனாக அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அப்படத்தை அவரே தயாரித்து இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →