ஆஸ்கருக்குத் தேர்வானது ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லெஸ்!
மலையாளத் திரைப்படமான ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லெஸ் ஆஸ்கர் தகுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளது.
வின்.சி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ‘ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லெஸ்’ திரைப்படம் விமர்சகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. நடிகை வின்சி அலோசியஸ் நாயகியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், இப்படம் சிறந்த பாடல் பிரிவில் 2024 ஆஸ்கர் விருதுக்கான தகுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வாரணம் ஆயிரம் மறுவெளியீட்டைக் கொண்டாடும் ரசிகர்கள்!
திரையரங்குகளில் கடந்த நவ.17 ஆம் தேதி இப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நடிப்பில் அசத்தும் வின்சி அலோஷியஸ்!