முகப்பு
செய்திகள்

சாதனை படைக்கக் காத்திருக்கும் சலார்!

சலார் திரைப்படத்தின் வசூல் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

செய்திகள்

சாதனை படைக்கக் காத்திருக்கும் சலார்!

சலார் திரைப்படத்தின் வசூல் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:29 PM
பகிர்:

கேஜிஎஃப்-2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

இரு நண்பர்களுக்கு இடையேயான படமென இயக்குநர் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். டிரைலரிலும் அதைக் காண முடிந்தது. 

சலார் திரைப்படம் வரும் டிச.22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில், சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 

குறிப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.  படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இப்படத்தில் நடிகர் யஷ் நடித்ததுள்ளதை படத்தில் பணியாற்றிய பாடகியும், குழந்தை நட்சத்திரமுமான தீர்த்தா சுபாஷ் என்பவர் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள இப்படம் முதல் நாள் வசூலில் ரூ.150 கோடியைத் தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் இப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கு ஆரம்பமாகிறது. மேலும், அம்மாநிலங்களில் டிக்கெட் விலையையும் அதிகரித்துள்ளனர்.

இதனால், சலார் இந்தாண்டின் மிகப்பெரிய படமாக கருதப்படுகிறது. முதல்நாளுக்கான டிக்கெட் முன்பதிவு வாயிலாக மட்டும்  இதுவரை இந்தியாவில் சலார் ரூ.12.25 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →