சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ முதல் பாடல் வெளியீடு!
மாவீரன் படத்தின் முதல் பாடலைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மாவீரன் படத்தின் முதல் பாடலைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மண்டேலா திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் மாவீரன். ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கிறார்.
பிரின்ஸ் படத்தின் தோல்விக்குப் பிறகு இந்தப் படம் வெளியாக உள்ளதால் இதில் சிவகார்த்திகேயன் மிகவும் கவனமாக நடித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க: ’வாரிசு’ ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
இந்நிலையில், இன்று சிவகாரத்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலான ‘சீன் ஆஹ்...சீன் ஆஹ்’ பாடல் வெளியாகியுள்ளது.