அஜித்துக்கு வில்லனாகும் பிரபல நடிகர்?
ஏகே 62-ல் நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏகே 62-ல் நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்த துணிவு திரைப்படம் ஜன.11ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதனைத் தொடர்ந்து, லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டு இருந்தது. பின்னர் சில பிரச்னைகளால் இந்தப் படத்திலிருந்து அஜித் விலகுவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
ஆனால், விக்னேஷ் சிவன் தன் டிவிட்டர் பக்கத்தில் ஏகே 62 பற்றிய தகவலை நீக்கியதும் அவர் படத்திலிருந்து விலகியது உறுதியானது.
இதையும் படிக்க: பதான் ரூ.1,000 கோடி வசூல்!
அவருக்கு பதிலாக ‘கலகத்தலைவன்’ படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனியுடன் அஜித் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், ’ஏகே 62’ படத்தை மகிழ் திருமேனி இயக்குவது உறுதியாகியுள்ளதாகவும் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க நடிகர்கள் அருண் விஜய் மற்றும் அருள்நிதி ஆகியோருடன் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அருண் விஜய் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித் குமாருக்கு வில்லனாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.