முகப்பு
செய்திகள்

பிரபல இயக்குநர் இயக்கத்தில் விஜய் சேதுபதி

பிரபல இயக்குநர் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:35 AM
பகிர்:

பிரபல இயக்குநர் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான வெந்து தணிந்தது காடு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து, கௌதம் ‘வெந்து தணிந்தது காடு - 2’ படம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 

இதையும் படிக்க: ’காந்தாரா 2'-ல் ரஜினி?

இந்நிலையில், அதற்கு முன்  நடிகர்கள் விஜய் சேதுபதி, அபிஷேக் பச்சனை வைத்து புதிய படமொன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது, கெளதம் மேனன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். அவர் தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்ட பின் புதிய படத்தை இயக்குவார் என தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.